Pages

Saturday, 10 August 2013

வண்ணதாசனின் வன்மம்


இலக்கிய சிந்தனை 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதையை எழுதியதாக தமிழருவி மணியனை வண்ணதாசன் தேர்வுசெய்திருக்கிறார்.

இலக்கிய உலகத்தின் மேலுள்ள மொத்த வன்மத்தையும் காண்பிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை வண்ணதாசன் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
வண்ணதாசனின் பரந்த வாசிப்பிலிருந்து வெளியேறிய கருணையை தேடி கிளம்பியவர்களின் எண்ணிக்கை சொற்பம் தான்.

யாரும் அண்டமுடியாத வண்ணதாசனின் நிறம்பெயர்ந்த உலகத்திற்குள் அரசியல்வாதிகளின் பிரேதங்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. தேவதூதர்கள் காப்பாற்றப்போகிற இலக்கியப்பரப்பை அரசியல்வாதிகள் அணைத்தபடி நடந்துசெல்வதை வரலாறுமுழுக்க பதிவுசெய்ய கிளம்பிவந்த இலக்கியவாதிகள் குளிப்பதற்கு தோதாக தாமிரபரணி தெளிந்தோடிக்கொண்டிருக்கிறது.

இலைகளின் அசைவையும் எறும்புகளின் உணவையும் கவித்துவமாக்கும் வண்ணதாசன்கள் சுமந்துதிரியும் பட்டியல்களில் அரசபரம்பரைகளின் பெயர்களே அதிகமும் உலவுகின்றன. பஞ்சம்பிழைக்க கிளம்பிப்போன இலக்கியவாதிகள் வணிகத்தின் கதவிடுக்கில் சிக்கிக்கொண்டிருப்பதை குற்றஞ்சாட்ட காலத்தின் சுட்டுவிரல்கள் சூம்பியிருப்பதை மன்னித்துவிடலாம். காலத்துமாற்றங்களை கற்றுக்கொண்டுவிட்ட வண்ணதாசன்களை ?

வெற்றுடம்பில் சாட்டையடிகளின் சப்தம் மாத்திரம் நிற்பதேயில்லை.
                                                              --குருசு.சாக்ரடீஸ்
 

No comments:

Post a Comment